Jai Bhim, Tamil Review

Estimated read time 2 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

In Jai Bhim, One of Hot Chocolate, Hot Shot, and actor Suriya’s amazing, great films (Younger Killer Looks). Courtroom drama that is utterly astounding & captivating from the very first scene. Clearly distinctive, even in the first 5–10 minutes. We write this review entirely in tamil. Don’t hesitate to read further.

கணவர் பெயர் கேட்டாலே மகிழும் மனைவியாக
செங்கேனி…. மனைவிக்கு என்றாவது ஒருநாள் கல் வீடு கட்ட முடியாதா என ஏக்கம் கொண்டு … கட்டி தர துடிக்கும் கனவனாய் இராஜாகண்ணு …!

சிலை செய்பவனுக்கும் … செய்த சிலை
கடவுள்தான் !
செய்த சிலையை பார்க்கும் நமக்கும்…
கடவுள்தான் !
பார்ப்பதில் இல்லை உயர்வு – தாழ்வு !!!!
பார்ப்பவரிடம்தான் உள்ளது அந்த ஏற்றத்தாழ்வு !

Sponsored Short film Playlist: 

பாம்பு பிடிப்பது என்பது ஒன்றும் கீழ்த்தரமான தொழில் இல்லை என அதை செய்யும் மனதனுக்கு தெரியும். … ஆனால்
அதை பார்க்கும் கண்களுக்கு அது தெரிவதில்லை..

பணம் படைத்தவன் செய்யும் தவறுக்கு … இவர்களை போன்ற ஏழைகள் பெறக்கூடிய தண்டனையே பதில் என்ற மனப் போக்கிற்கு பலர் மனம் வந்த நேரம் அது…
அன்று கிராமத்து பிரமுகர் இல்லத்தில் பாம்பு பிடிக்க இராஜாகண்ணு சென்ற நேரம் … அதே சமயம் அவர் வீட்டில் நகை திருட்டு போக …. பலி இராஜாகண்ணு மீது திணிக்கப்பட்டது.

Suriya s Jai Bhim Movie review in tamil

மனைவி கர்பவதி … அதனால்…
வேலைக்காக ஊரு விட்டு வேறு ஊர் சென்ற இராஜாகண்ணு ….
தான் நகை திருடிய திருடன் என்ற … செய்த தவறை மறைக்க தப்பித்து சென்றதாக கூறப்பட்டு…. ஊரார் முன் செங்கேனியை அடித்து இழுத்து காவல் நிலையம் சேர்த்தனர் காவல் துறை நண்பர்கள்……..
அதே நேரம் செங்கேனி கர்பனி என்று தெரிந்து இதை செய்யும் நண்பர்களாய் காவலர்கள்.

அவர் மட்டும் அல்லாது அவருடன் உற்றார் உறவினர் என அனைவரையும் காவல் நிலையம் கொண்டு வந்து சித்தரவதை செய்யும் நண்பர்களாக இங்கு காவலர்கள்.

இதை எதையும் அறியாமல் .. என்றும் போல் மனைவியை காண விடுப்பு கேட்க்கும் இராஜாகன்னு விடம் மறுக்கும் முதலாளி… ஆனால் அதை எதிர்த்து மனைவி மகளை காண ஆவலோடு வரும் இராஜாகண்ணு வை அடித்து உதைத்து ஊர் தலைவரே காவல் நண்பர்களிடம் ஒப்படைக்கும் அவலமும் காட்டப்பட்டுள்ளது.
ஊருக்காக வாழ்ந்தவனை ஊரே காட்டி கொடுக்கு நிலை மன கலக்கம்தான்!

தன் அக்காவை மான பங்கம் செய்து கொடுமை செய்யும் காவல் நண்பரை உண்மையான காவல் நண்பர் தட்டி கேட்க்கும் தன்மையும் உள்ளே நடப்பதை பார்ப்போர் விழிகள் கலங்குகின்றன…

இராஜாகண்ணு , மொசகுட்டி , இருட்டப்பன்
ஆகியோர் காவல் நிலையத்துக்குள் வைத்து கொடுமை படுத்தப்படுகின்றனர் .

இதற்கிடையே உதருபவர்களுக்கு மத்தியில் கை கொடுக்கும் கரங்களும் நிச்சயமாக உண்டு என்பது போல் … கை கொடுக்கும் கரங்கள் ‘ அறிவொளி இயக்கம் ‘ கிராம மக்களுக்கு வகுப்பெடுக்கும் பெண்ணாக வரும் மித்ரா… செங்கேனிக்கு வழி காட்ட …செங்கேனி வழக்கறிஞர்கள் chandhru என்பவரை கண்டு நடந்ததை கூற….

Jai bhim powerful suriya dialogues in tamil

உண்மைக்காக போராடும் வேளையில்….
நியாயம் காக்க எண்ணி வழக்காட செல்லும் …
சந்த்ரு வாக வழக்கறிஞர் . சூர்யா. (chandhru)

உண்மைக்காக போராடும் மனமும் .. செய்ததை மறைக்க போராடும் காரணமும் நேருக்கு நேர் நின்ற போதும் உண்மை வென்றது…

காவலர் கொடுமை செய்தது உண்மை என புலப்பட்டது … வழக்கு ஆய்வாளர் கைக்கு மாறியது…

வழக்கறிஞர்கள் என்றாலே வெறுக்கும் காவலரும்..
காவலர் என்றாலே வெறுக்கும் வழக்கங்கரிகரும்…
சேர்ந்து உண்மைக்காக போராடும் நிகழ்வு நிகழ்ந்தது !

Sponsored tamil short film playlist:

Jai bhim storyline in tamil

மனிதர்களிடம் இருந்து விலகி வாழ்வதே நல்லது என பாம்பிடம் கூறிய இராஜாகண்ணு நிலை என்ன என விசாரித்த குழு….
இது இராஜாகண்ணு மட்டும் அல்ல இதில்
பல. இராஜாகண்ணு. இருப்பதை கண்டனர்.

செய்யும் தொழிலில் உயர்வு தாழ்வு பார்த்தால்…
இங்கு யாரு நாகரீகமாக கூட வாழ இயலாது.

உயர்வு – தாழ்வு மனிதன் படைப்பு…
யாவரும் சமம் மஹான்களின் படைப்பு…
நாம் மனிதன் ஆவதும் .
மஹான்கள் ஆவதும் நம் கையில் என உணர வைத்தது இவர்களின் நிலை !

Jai bhim powerful story narration in tamil

மொசகுட்டி , இருட்டப்பன் கொடுமை செய்ய பட்டது புலப்பட்டது … அவர்கள் கண்டறியப்பட்டு காக்கப்பட்டனர்.

இராஜாகண்ணு கொடுமை மட்டும் செய்யப்படவில்லை … கொலை செய்யப்பட்டார் என்பதும் தெரியவந்தது. கிராமத்து பிரமுகர் வீட்டில் திருட்டு போன நகைகள் சில நாட்களிலேயே கண்டறிய பட்டதும் … அதை திருடியவனிடம் பணம் வாங்கி இராஜாகண்ணுதான் திருடியவன் என்று கூறி அவரை கொடுமை செய்து அடித்து உதைத்தனர் காவல் நண்பர்கள்.

வலி தாங்காமல் நான்தான் திருடினேன் என கூறி விட்டால் திருடன் என்ற பட்டம் காலம் முடியும் வரை வலிக்கும் என அறிந்து இந்த வலியை பொருத்துக்கொண்டார் இராஜாகண்ணு.

மார்பில் பட்ட காவல் நண்பர்களின் கால்களில் உள்ள கடினமான காலணி இராஜாகண்ணுவின் மார்பெலும்பை உடைத்து உயிரை அந்த கொடுமை கார நண்பர்களிடம் இருந்து தனியாக பிரித்துவிட்டது.

இதை விபத்து என காட்ட முயன்ற அவர்கள் அதே காவல் துறை நண்பர் தலைமை ஆய்வாளர் பெருமாள் சாமி என்பவரால் கண்டறியப்பட்டு காட்டப்பட்டார்.

அன்று பாண்டிய மன்னனிடம் நீதி கேட்டு கண்ணகி நின்றால். இன்று நீதி கேட்டு செங்கேனி நிற்பது நம்மிடம் நீதி கேட்பது போல் உணர செய்த தருணம் அது.

Jai bhim powerful dialogues in tamil

தினமும் புது வாழ்க்கை …..
நமக்காக பிறப்பதில்லை ! ஆனால்……
புதிய தொடக்கம் பிறக்கத்தான் செய்கிறது !
உனக்கு – எனக்கு என அல்ல..
நமக்கான தொடக்கம் அது !

உன்னை எரிக்கும் அதே நெருப்புதான் எனக்கும் !
உன்னை மறைக்கும் அதே
மண்தான் எனக்கும் !
உனக்கு – எனக்கு என அல்ல..
நமக்கான இடம் அது !

நடந்தது என்ன ??? என அறியாது…..
நடந்ததை கண்டு….நடப்பதை யூகித்து….
செய்யாததை செய்ததாக எண்ணி.,..தான் செய்வதை செய்யும் … அழிக்கும் கரங்களாக ….. காவலர்கள்.

அவர்களின் இருந்து காக்க்கும் கரங்களாக அதே காவலர்.

நம் முகத்தில் நாம் காணும் மகிழ்ச்சியை .. நாம் காணும் அனைவர் முகத்திலும் காண வேண்டும் !

எனக்கு – உனக்கு என இந்த வாழ்க்கை படைக்க படவில்லை. நமக்கு என இருக்கும் இந்த வாழ்க்கையை நமக்காக வாழ தூண்டும் திரை உண்மையாக ஜெய் பீம் !

நண்பர்களாக இருக்க வேண்டியவர்கள் …
நண்பர்களாகவே செயல் பட்டால் என்றும் அவர்கள் நமக்கு நண்பர்களே !

வாழ்வேன் என்பது வீண்!…
வாழ்வோம்!
வெல்வோம்!

என்றும் அன்புடன்,
இனியவன்.கணேஷ். (Review Credits Goes to him) – Guest blogger in shortfundly


Also read latest short film review from shortfundly


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author