சர்ச்சையான சபாபதி போஸ்டர்: சந்தானம் மீது புகார்! ட்விட்டரில் டிரெண்டாகும்.. #WeStandWithSanthanam #சாதிவெறி_சந்தானம்

Estimated read time 1 min read
Join Shortfundly OTT WhatsApp Community now to latest OTT industry updates — https://chat.whatsapp.com/Ea6gYzsoCCO8PKViiYxNSp

நடிகர் சந்தானம் நடிப்பில் வெளியாக உள்ள சபாபதி படத்தின் போஸ்டர் சர்ச்சையான நிலையில், சந்தானம் மீது சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டுள்ளது.
ஹீரோவான சந்தானம், வருடத்திற்கு ஒரு சில படங்களில் மட்டும் நடித்து வருகிறார்.

இந்த ஆண்டில் மட்டும் சந்தானம் நடிப்பில் பாரிஸ் ஜெயராஜ் மற்றும் டிக்கிலோனா ஆகிய இரு படங்கள் வெளியாகின. ஆனால், இரண்டுமே சொல்லிக் கொள்ளும்படி வரவேற்பு பெறவில்லை. தற்போது, வரும் 19ஆம் தேதி சபாபதி படம் வெளியாக இருக்கிறது.

Sponsored Short film Playlist:

இந்த நிலையில், சந்தானம் மீது சென்னை காவல்துறை ஆணையர் அலுவலகத்தில் தந்தை பெரியார் திராவிட கழகத்தின் சென்னை மாவட்ட செயலாளர் குமரன் புகார் அளித்துள்ளார்.

இவர், அளித்துள்ள புகாரில் கூறியிருப்பதாவது: கடந்த சில நாட்களுக்கு முன்பு, சந்தானம் நடித்துள்ள சபாபதி படத்தின் போஸ்டர் ஒன்று வெளியானது. அதில், சந்தானம் ஒரு சுவற்றின் மீது சிறுநீர் கழிப்பது போன்றும், அந்த சுவற்றில் தண்ணீர் திறந்துவிடக் கோரி கண்டன ஆர்ப்பாட்டம் திரண்டு வாரீர் என்றும் குறிப்பிடப்பட்டிருந்தது.

WhatsApp Image 2021 11 17 at 7.14.35 PM


பருவ காலங்களின் போது தமிழகத்திற்கு அண்டை மாநிலங்களிடமிருந்து தண்ணீர் திறந்துவிடக் கோரி போராட்டம் நடத்தப்பட்டு வருகிறது. கடந்த காலங்களில் சினிமா பிரபலங்கள் சார்பிலும் போராட்டங்கள் நடத்தப்பட்டது. அப்படியிருக்கும் போது சந்தானத்தின் இந்த சபாபதி பட போஸ்டர் தண்ணீர் திறந்துவிடக் கோரி நடத்தப்படும் போராட்டங்களை கேலி செய்வது போன்றும், கிண்டலடிப்பது போன்றும் உள்ளது.

Also, read the latest entertainment news from shortfundly


ஆகையால், ரசிகர்களுக்கும், பொதுமக்களுக்கும் முன்னுதாரணமாக இருக்க கூடிய ஒரு ஹீரோ இது போன்ற செயல்களில் ஈடுபட்டது மற்றவர்களையும் இது போன்று செய்ய ஊக்குவிக்கும் வகையில் இருக்கிறது. எனவே, சந்தானம் மற்றும் சபாபதி பட இயக்குநரான சீனிவாசராவ் ஆகியோர் மீது ஐபிசி பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்து சட்டப்படி நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அந்தப் புகாரில் கூறப்பட்டுள்ளது.


இதற்கிடையில், திரைப்படங்களில் ஒருவரை உயர்த்திப் பேசுவதற்காக மற்றவரை தாழ்த்திப் பேசக் கூடாது என்று ஜெய் பீம் படம் குறித்து சபாபதி பட பத்திரிக்கையாளர் சந்திப்பு நிகழ்ச்சியின் போது தனது கருத்தை தெரிவித்திருந்தார். இதற்கு #WeStandWithSanthanam #சாதிவெறி_சந்தானம் என்ற டுவிட்டர் ஹேஷ்டேக்குகல் மூலமாக பலரும் ஆதரவும், எதிர்ப்பும் தெரிவித்து வருகின்றனர்.


About Shortfundly

Shortfundly is an online technology and design-focused, data-driven OTT platform company that curates and shares the best short films and stories through our global multi-platform network. Our video and editorial platform enables a global audience to easily discover, watch, and share unique stories anywhere on their desktop and mobile devices.

If you plan to release and promote in OTT platform. Learn how to distribute short film via shortfundly

For publishing an advertorial article about your digital news/product launch/ short film/web series/album song on our website, drop an email at [email protected]

We accept guest blogging on our platform. Do let share your article with us

Check out our YouTube channel for other interesting podcasts & interviews with filmmakers.

You May Also Like

More From Author